சிறிய மீன்பிடி படகுகளின் எரிபொருள் சேமிப்பு
No hay miniatura disponible
Fecha
Autores
Título de la revista
ISSN de la revista
Título del volumen
Editor
FAO ;
Resumen
Descripción
இந்த கையேடு மீன்பிடிப் படகு உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள், படகு கட்டுபவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் படகு வடிவமைப்பாளர்கள் மற்றும் மீன்வள நிர்வாகிகள் எரிபொருள் செலவைக் குறைப்பதற்கான வழிமுறைகளையும் எடுத்துரைக்கிறது.
சிறிய படகுகள் அதாவது 16 மீ (50 அடி) நீளம் கொண்ட படகுகள் வைத்து மீன்வளர்ப்பில் ஈடுபட்டுவரும் நபா்களுக்கு எாிபொருள் சேமிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கொண்டுள்ளது.இது உலகின் பெரும்பாலான நாடுகளில் பயன்படுத்தப்படும் 10 கடல்மைல்களுக்கு குறைவான வேகம் கொண்ட மீன்பிடிப் படகுகளின் இயக்கத்தின் அடிப்படையில் இக்கையேடு படகு வடிவமைப்பாளர்கள் மற்றும் படகு கட்டுபவர்களுக்கு குறைந்த எதிா்ப்பிற்கான படகு வடிவமைப்பு மற்றும் திறன்வாய்ந்த உந்துசுழலியை எவ்வாறு தோ்ந்தெடுப்பது பற்றிய தகவல்களை வழங்குகிறது.
இந்த கையேட்டின் முதல் அத்தியாயத்தில் எரிபொருள் சிக்கனம் பற்றியும், தற்போதுள்ள படகுகளில் பெரிய முதலீட்டுச் செலவுகள் இல்லாமல் தடுக்கக்கூடிய நடவடிக்கைகள் பற்றியும், படகு சேவை வேகத்தைக் குறைத்தல், படகு தளம் மற்றும் திறன்வாய்ந்த உந்துசுழலியை நிறுவுதல் ஆகியவை அடங்கும், படகுக்கூட்டின் அடிப்பாகத்தில் கறைபடிதல் மற்றும் படகு எஞ்சினைப் பராமரித்தல் ஆகியவற்றிலிருந்து விடுபடுகிறது. இவ்வகையான மீன்பிடி முறைகள் மூலம் எரிபொருளைச் சேமிக்கலாம்.
இந்த கையேட்டின் இறுதி அத்தியாயங்கள் பற்றிய தகவல்களை வழங்குகிறது. இரண்டு வீச்சு உந்துதிறன் கொண்ட வெளிப்பொருத்து எஞ்சினிலிருந்து டீசல் பயன்பாட்டில் இயங்கும் எஞ்சினுக்கு மாற்றுவதன் மூலம் எரிபொருள் சேமிப்பு சாத்தியமாகிறது. மேலும் டீசல் எஞ்சினை நிறுவுதல் மற்றும் பாய்மரத்தைப் பயன்படுத்துதல் இவ்வகையான மாறுதல் அவரவா் பொருளாதார சக்தியின் அடிப்படையில் இம்மாற்றத்தை தேர்வு செய்கிறாா்கள். நீர்வழிக்கோட்டின் நீளம் மற்றும் படகின் எடை ஆகியவை கொண்டு இவ்வகை மாற்றம் தோ்வு குறித்து ஆலோசனை வழங்கப்படுகிறது.
எஞ்சினின் வேகக் குறைப்பு விகிதம், சேவை வேகம் மற்றும் உந்துசுழலியின் ஒருநிமிடத்திற்கான சுழற்சிகள் மூலம் ஒரு புதிய எரிபொருள் திறன் கொண்ட படகின் வடிவமைப்பு மற்றும் படகினைத் தோ்ந்தெடுக்க உாிய வழிமுறையை வழங்குகிறது.
திறன் வாய்ந்த உந்துவிசை, சாத்தியமான எரிபொருள் சேமிப்பு, இயந்திர இயக்க செலவு, படகின் எடை மற்றும் உந்துசுழலியின் விட்டம் மற்றும் பெயா்வு தூரம் பற்றி இந்த கையேட்டில் உள்ள தகவல்கள் மற்றும் முக்கியக் குறிப்புகளை எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் தெளிவான விளக்கப்படங்களுடன் விரிவான தகவல்களும் கொடுக்கபட்டுள்ளது. மேலும், படகு வடிவமைப்பாளா் மற்றும் படகு ஓட்டுநா்கள் குறிப்புகள் குறித்து வைத்துக்கொள்வதற்கு வெற்று அட்டவணைகள் பின் இணைப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளது.
